ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 8 வயது சிறுமி காதுவா பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக.வின் 2 மாநில அமைச்சர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நாளை ஸ்ரீநகரில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன் மீதான அதிருப்தியை பாஜக மேலிடத்திற்கு தெரிவிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். சிறுமி கொலை வழக்கில் நீதியை நிலைநாட்ட மாநில அரசுக்கு பாஜக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அதனால் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வந்த பாஜக, பிடிபி கட்சி கூட்டணி இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பாதுகாப்பு வீரர்களால் பொதுமக்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.