ஸ்ரீநகர்

ஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் தனி மாநிலம் அமைக்க கோரிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கருத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி எதிர்த்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநில இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் தலைவரான நாசிர் அல் இஸ்லாம் என்பவர், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளார்கள்.   இந்தியாவில் தங்களுக்கு என ஒரு தனி மாநிலம் வேண்டும் என கோரிக்கை அளிக்க வேண்டும்.    பசுபாதுகாப்பு, லவ் ஜிகாத் என பலவிதங்களிலும் குறி வைக்கப்படும் இஸ்லாமியர்கள் தனி மாநிலம் கோருவத தவிர வேறு வழியில்லாமல் உள்ளனர்”  என கூறி உள்ளார்.

இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அவர், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி.   இதை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக போராடி அதனால் நாம் இழப்புக்களை சந்தித்துள்ளோம்.   மத ரீதியாக நாட்டை பிரிப்பது தவறானது.   இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என கோருபவர்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன்”  எனக் கூறி உள்ளார்.

தான் எதிர்ப்பதாகக் கூறினாலும் யாரை எதிர்க்கிறோம் என மெகபூபா பெயரை கூறாதது குறிப்பிடத்தக்கது.