ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, அரசு பங்களாவில் இருந்து வீட்டுச் சிறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

நாடே கொரோனா களேபரத்தில் இருந்தாலும், தன் வேலையில் கவனமாக இருக்கிறது மோடி அரசு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மெகபூபா முப்தி, இதற்கு முன்பாக ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் அருகே, மவுலானா ஆசாத் சாலையில் உள்ள அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டார். இந்தாண்டு, பிப்ரவரி 6ம் தேதி அவர்மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில், மெஹ்பூபா முப்தியும் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

ஏப்ரல் 7ம் தேதியான நேற்று, அவர், ஏற்கனவே சிறைவைக்கப்பட்டிருந்த அரசு பங்களாவிலிருந்து, குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ பேர்வியூ பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே, தொடர்ந்து சிறைவைக்கப்படும் மெஹ்பூபா முப்தியை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் மற்றொரு காஷ்மீர் தலைவரான ஒமர் அப்துல்லா.