காஷ்மீருக்கு நிரந்தர சிறப்பு அந்தஸ்து : உச்சநீதிமன்றத்துக்கு மெகபூபா பாராட்டு

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நிரந்தமாக்கப்பட வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முதல்வர் மெகபூபா முஃப்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைக்கும் போது காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370ன் கீழ் தற்காலிக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.   அதன்படிவெளி மாநிலத்தை சேர்ந்தவர் மாநிலத்தில் நிலம் மற்றும் வீடுகள் வாங்க முடியாது மற்றும் வெளி மாநிலத்தவரை திருமணம் செய்துக் கொள்ள தடை என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.    சமீபத்தில் இது குறித்து வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆதர்ஷ் கோயல் மற்றும் நாரிமன் ஆகியோரின் அமர்வு காஷ்மீர் மாநிலத்துக்கு தற்காலிகமானது என்பது சரியல்ல என தெரிவித்துள்ளது.  அதை நிரந்தரம்.  ஆக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”விதி எண் 370 காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மையை மட்டுமின்றி மதம், கலாச்சாரம், மொழியின் தனித்தன்மை மற்றும் மாநில ஒற்றுமையையும் காப்பாற்றி வருகிறது.    இந்த சிறப்பு அந்தஸ்தை நிரந்தரம் ஆக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதற்கு காஷ்மீர் மக்களின் சார்பில் எனது வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்”  என பதிந்துள்ளார்.