Random image

தனது சொத்துக்களை மத்தியஅரசு சட்டவிரோதமாக கைப்பற்றி உள்ளது: தலைமறைவாக உள்ள மெகுல்சோக்ஷி குற்றச்சாட்டு

ந்தியாவில் இருந்து தப்பிச்சென்று ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு தலைம றைவாக  தங்கி உள்ள  பிரபல வைர வியாபாரியான மெகுல்சோஷி பிரபல தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வீடியோ காண்பரன்சிங் மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது மத்திய அரசு மீது  பல்வேறு  குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மேலும்,  தனது சொத்துக்களை சட்ட விரோதமாக மத்திய அரசு முடக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிஎன்பி மோசடியில்,  பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோஷியும்  ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்று விட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை  விசாரணையை மேற்கொண்டு வருகிறது.  இதையடுத்து இந்திய  அமலாக்கப்பிரிவு நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோருக்கு   சர்வதேச போலீசான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்தி ருந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று இண்டர்போலுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு வீடியோ காண்பரன்சிங் மூலம் மெகுல் சோக்ணி பேட்டி அளித்தார்.

அப்போது, தன்மீது கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தனது சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு சட்டவிரோதமாக முடக்கி வைத்துள்ளது, மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக தன்மீதான மதிப்பு தகர்ந்துள்ளது. தனது பிரான்டடு வேல்யு பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறி உள்ளார்.

மத்திய அரசு முடக்கி உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்து, தனது கடன்களை அடைத்துக்கொள்ளலாம் என்றும், தன்மீது அமலாக்கத்துறையினர் தவறான தகவல்களை தொடர்ந்து  கூறி வருகிறது என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.