இந்தியாவில் கைகளால் தயாரிக்கப்படும் சோப்பின் பொன் விழா

--

சென்னை

ருத்துவர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கைகளால் தயாரிக்கப்படும் மெடிமிக்ஸ் சோப் 50 ஆண்டுகளை எட்டி உள்ளது.  இதை ஒட்டி ஆங்கில ஊடகமான தி நியூஸ் மினிட்” வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கம் இதோ :

இந்திய ரெயில்வேத் துறையில் மருத்துவராக பணி  புரிந்தவர் வி பி சித்தன்.   கடந்த 1960 களில் ரெயில்வே தொழிலாளர்களுக்கு ஒரு வித தோல் நோய் பரவத் தொடங்கியது.   அதற்கு சிகிச்சை செய்த சித்தன், அடிபடையில் ஒரு நாட்டு மருத்துவ குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.  அதனால் அவர் ஒரு சில மூலிகை சாறுகளை அந்த நோயாளிகளுக்கு அளித்ததில் தோல் நோய் விரைவாகவும் முழுவதுமாகவும் குணம் ஆகியது.

இதனால் கடந்த 1969ஆம் ஆண்டு அந்த மூலிகைகளைக் கொண்டு ஒரு குளியல் சோப் ஒன்றை தனது வீட்டிலேயே தனது மனைவியின் உதவியுடன் சித்தன் தயாரிக்க  ஆரம்பித்தார்.   அந்த சோப்பை தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் அளித்தார்.   அதை உபயோகித்தவர்கள் குணமடைந்து அது குறித்து மற்றவர்களிடம் சொல்ல அதன் தேவை அதிகரித்தது.   கடந்த 1970 ஆம் வருடம் இந்த சோப் உற்பத்தி முழு அளவில் தொடங்கியது. அந்த சோப்பின் பெயர் ‘மெடிமிக்ஸ்’

சென்னை மாதவரத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோப் தொழிற்சாலையில் கைகளால் சோப் செய்யப்படுவது குறிப்பீட தக்க அம்சமாகும்.    அத்துடன் இதில் எந்த ஒரு ரசாயனப் பொருளும் சேர்க்கப்படாமல் 18 வகை மூலிகைப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது.   இதுவும் இந்த சோப்பின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆகும்.

கடந்த 80களின் ஆரம்பத்தில் நடந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் உள்ள இந்த நிறுவனம் பாதிப்புக்குள்ளாகியது.   இந்த சோப் வேறு பல ஊர்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கபடது.  அதன்பிறகு சித்தனின் மருமகன் அனூப் பொறுப்பேற்று மீண்டும் சென்னையில் உற்பத்தி தொடங்கியது.

மூலிகைகள் என்பதைக் காட்ட முதலில் பச்சை நிறத்தில் மட்டுமே இந்த சோப் தயாரிக்கப்பட்டுள்ளது.  தற்போது கிளிசரின் சோப் என்னும் வகையில் கண்ணாடி போல டிரான்ஸ்பரண்ட் ஆகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.   இன்றைக்கும் எந்த ஒரு ஓட்டலுக்கு சென்றாலும் அவர்களால் அளிக்கப்படும் சோப் மெடிமிக்ஸ் ஆக இருக்கும் என்பது பயணம் செய்பவர்கள் அனைவரும் அறிந்ததே.

COURTESY : THE NEWS MINUTE