ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டி

டெல்லி:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளது.

இதில் பாஜ சார்பில் பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் பிரிவை சேர்ந்தவர். இதனால் எதிர்கட்சிகள் நிபந்தனை இன்றி ஆதரிக்கும் என்று பாஜ நினைத்தது.

ஆனால் தற்போது முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.