வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்.

இந்த வன்முறையில் அவருக்கும் முக்கியமான பங்குண்டு என்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள மெலனியா, அதில் கூறியிருப்பதாவது, “நமது தேசத்தின் சிவில் நடைமுறையின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நமது நாட்டின் தலைநகரில் நடைபெற்ற வன்முறையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

வன்முறை என்பது எப்போது ஏற்கத்தக்கதல்ல. வன்முறையில் இறந்த அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால், இந்த வன்முறையில் என்னை சம்பந்தப்படுத்தி சிலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். என்மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் உடைந்து போயுள்ளேன். ஆனால், சிலர் திட்டமிட்டு என்னை குறிவைத்து அவதூறு பரப்புகிறார்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.