ஹாலிவுட் ரேஞ்சில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’…!

ராவுத்தர் பிலிம்ஸ் சாரில் முகமது அபுபக்கர் தயாரிப்பில் , அறிமுக இயக்குநர் யு.கவிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘ எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ‘ . ஆரி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஷஷூவி பாலா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கெளதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலையை பி.சேகர் நிர்மாணிக்க, கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கிறார். டேஞ்ஜர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்