ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை இழிவு படுத்திய பிரபல பிரிட்டன் நாளிதழ்

--

இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்வத்றகாகன தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜ சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்கட்சிகள் சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி தேர்வு குறித்து பிரிட்டன் நாளிதழ் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தலித் சமூகத்தை தீண்டத்தகாகத சமுதாயம் என்றும், தாழ்ந்த் சமுதாயம் என்று குறிப்பிட்டுள்ளது. அதன் விபரம்:

இந்தியாவில் ஏழ்மை மற்றும் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படவுள்ளார்.

பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை மோடியின் அரசாங்கம் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தலித் (தீண்டத்தகாத) சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இந்து தேசிய வாதிகளால் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்ப்டட உறுப்பினர்கள் தேசிய அளவில் நடக்கும் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இன்று அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஜனாதிபதி பதவி 5 ஆண்டுகள் கொண்டதாகும். 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் எளிதாக தன்னை எதிர்த்து போட்டியிடும் மீராகுமாரை வீழ்த்திவிடும் நிலை தான் உள்ளது. இரு வேட்பாளர்களுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் தேர்தலில் சமூகத்தை முன்னிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக தலித் இங்கு தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அறியப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டும், வறுமையால் பாதிக்கப்பட்ட இந்த சமூகம் கடந்த 70 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்ட பல திட்டங்களால் வெளியில் வர முடிந்துள்ளது. இந்த சமூகத்தின் அறியப்பட்ட தலைவராக அம்பேத்கர் இருந்துள்ளார். ஒரு கிராமத்தில் இந்த சமூகத்தில் தூய்மையற்ற எச்சிலை சேகரிப்பதற்காக கழுதை சுற்றி எச்சிற் படிகம் அணிய வலியுறுத்தப்பட்டது.

டில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பத்ரி ரெய்னா என்பவர் கூறுகையில்,‘‘ கடந்த 40 ஆண்டுகளாக இந்து ஒற்றுமைக்கு தலித்களின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது. அதனால் இந்த சமூகத்தை மேம்படுத்த மோடி அரசு செயல்படுகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் கலாச்சாரம் இந்துக்களின் பாரம்பரியம் கொண்டது. எனினும் தலித்கள் மீது சந்தேக பார்வை கொண்டு தான் இருக்கும். இது பாரதிய ஜனதா கட்சியிலும் பார்க்க முடியும். இங்கு உயர் ஜாதியினரின் ஆதிக்கம் தான் இருக்கும். பாஜ பொது இடங்களில் தலித் ஆதரவு செயல்பாடுகளை கடைபிடித்தாலும், பசுக்களை பாதுகாக்க அக்கட்சி கொடுக்கு முக்கியத்துவம் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

தலித் மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து தான் உள்ளது. இது ஊட்டச்சத்து மற்றும் தோல் சந்தையை அடிப்படையாக கொண்டுள்ளது. ஆனால், பாஜ இதற்கு விதிவிலக்கு எதுவும் அளிக்கவில்லை’’ என்றார்.

குஜராத்தில் கடந்த ஆண்டு தலித் சமூகத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் தங்களது வழக்கமான தொழிலான மாட்டு தோல் சேகரித்தத்றகாக பசு பாதுகாவலர்களால் பொது இடத்தில் தாக்கப்பட்டனர். இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததன் மூலம் முஸ்லிம்கள் மட்டுமின்றி அதிகளவில் தலித் இன மக்களும் பாதிக்கப்பட்டுளளனர்.

இதற்கு முன்பே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலித் மக்களுக்கு சோப்பு, ஷாம்பு வழங்கி சுத்தம் செய்துகொண்டு தன்னை சந்திக்க வரும்படி உத்தரவிட்ட சம்பவம் நடந்தது. ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் கே.ஆர். நாராயணனுக்கு பின் 5 ஆண்டுகள் இந்த பதவியில் இருக்கபோகும் இரண்டாவது தலித் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் தலித் சமூகத்தை மிகவும் இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளது.