சென்னை:

வ்வொரு துறையை பற்றியும் கேள்வி கேட்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது,  கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலை வர் துரைமுருகன்,  இதற்கு முன் கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும் என்றும் ஆனால் நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  ஒவ்வொரு துறையை பற்றியும் தொகுதிக்கு உட்பட்டு கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு..  முதல்வர் பதில் கூற முடியாதவர் அல்ல.. அவர் பதிலை பார்த்து பல முறை வியந்துள்ளேன். ஆகவே நாளையில் இருந்தாவது இம்மூன்று துறைகளில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்தார்.

அவருக்கு பதில் அளித்த  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாகவும், அவரது துறை தொடர்பாக கேள்விகளும் இடம்பெறும் என்று தெரிவித்தார்.