தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்….!

தமிழ்த் சினிமாவில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் திருச்சியை பூர்வீகமாக கொண்ட தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ கருதப்படும் தியாகராஜ பாகவதர்.

இப்படம் மட்டுமின்றி, அதற்குபிறகு நடித்த நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக்குமார் (1941), சிவகவி (1943) என அனைத்துப் படங்களும் திரையங்குகளில் மாதக்கணக்கில் ஓடி வசூலை அள்ளித் தந்தன.

இசை மாமேதை புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தைச் சூட்டினார்.

பொது மருத்துவமனையில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இறந்தார்.

நடிகர் எம்.ஆர்.ராதா உதவியுடன் அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, சங்கிலியாண்டபுரத்திலுள்ள சுடுகாட்டில் தந்தை, தாயாரின் உடலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

நடிப்புத்துறையில் மட்டுமின்றி, இசைத்துறையிலும் திருச்சிக்குப் பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு இங்கு அடையாளச் சின்னங்கள் எதுவும் இல்லை. எனவே அவரைக் கவுரவப்படுத்தும் வகையில் திருச்சியில் மணிமண்டபம் அமைத்துத்தர வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று மத்திய பேருந்து நிலையம் அருகில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி இன்று (ஜூன் 16) அடிக்கல் நாட்டினார்.