கடலூரில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம்: அரசாணை வெளியீடு

சென்னை:

டலூரில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இராமசாமி படையாட்சியரின் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.13. கோடியில் நினைவு மண்டபம் அமைக்க அனுமதி அளித்து, நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை செயலாளர் ரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் விழாவில் 19.7.2018 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாச்சி யாருக்கு அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உரிய இடத்தை தேர்வு செய்து, புலத்தணிக்கை அறிக்கையை அனுப்பும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. நினைவு மண்டப வரைபடங்களை ஒப்புதலுக்காக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கும்படி பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளரிடம் (கட்டிடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 16.3348 சதுர மீட்டர் பரப்பளவில் 0.69 ஏர்ஸ் நிலத்தில் (74 ஆயிரத்து 120 சதுர அடி) நினைவு மண்டபம் அமைக்கலாம் என்றும் அதற் காக ரூ.5.46 கோடி செலவாகும் என்றும் மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்க ஏதுவாக தயாரிக்கப்பட்ட ரூ.2.15 கோடி மதிப்பிலான தோராய திட்ட மதிப்பீட்டை அரசுக்கு முதன்மை தலைமைப் பொறியாளர் அனுப்பி வைத்து, அதற்கு அரசின் நிர்வாக அனுமதியும், நிர்வாக ஒப்பளிப்பும் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த தொகைக்கான திட்ட மதிப்புக்கு (பீடத்துடன் கூடிய சிலை அமைக்க ரூ.12.75 லட்சம் ஒதுக்கீடு) நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்க அரசு ஆணையிடுகிறது. இதை பராமரிக்க காப்பாளர் உள்பட 3 பணியாளர்களுக்கான தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You may have missed