விரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் சரண் பேட்டி….!

--

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று (செப்டம்பர் 27) காலை எஸ்பிபி சரண் மூன்றாம் நாள் சடங்குகளைச் செய்ய வந்தார்.

சடங்குகள் முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சரண் :-

கண்டிப்பாக இங்கு அப்பாவுக்கு நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பது என் ஆசை. எங்களுக்கு எஸ்பிபி ஆகவே இருந்துள்ளார். அவர் மக்களுடைய சொத்து. உங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அப்பாவுக்கு ஒரு நல்ல நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் குடும்பத்தினரின் ஆசை. இதற்கு இனிமேல்தான் திட்டமிட வேண்டும். மேப்பில் அப்பாவின் பெயர் போட்டால் இந்த இடத்தைக் காட்ட வேண்டும்.

அப்படியொரு அற்புதமான நினைவு இல்லமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. உலக மக்கள் அனைவருக்கும் அப்பாவைக் கொடுத்துள்ளோம். இனிமேலும் கொடுக்கவுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் நினைவு இல்லம் திட்டம் குறித்துச் சொல்லிவிடுவோம்.” என தெரிவித்துள்ளார் .