காமன்வெல்த் 2018: குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம், 1 வெள்ளி

குத்துச்சண்டை:  கவுரவ் சோலாங்கி – தங்கம்

கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர்  அமித்  வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றுள்ளார். 30 மீட்டர் 3 வகையான பொசிசன்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் 454.5 பாயிண்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில்,

தற்போது இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி 52 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அதுபோல ஆண்களுக்கான 46-49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல்: சஞ்சீவ் ராஜ்புத்  – தங்கம்

இன்று 10வது நாளாக காமன்வெல்த்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற  குத்துச்சண்டை இறுதி போட்டியில், இங்கிலாந்து வீரர் கலால் யபாய் இடம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதன் காரணமாக அமித்துக்கு வெள்ளி கிடைத்தது.

இந்தியா இதுவரை 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் பெற்று, மொத்தம் 46  பதக்கத்துடன் 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

குத்துச்சண்டை: அமித் – வெள்ளி