தாடி மற்றும் கறுப்பு உடையில் திருமண விழாவில் ஜோடியாக பங்கேற்ற மம்முட்டி- மோகன்லால்

 

மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் கொரோனா பரவலின் போது வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், துபாய் சென்று வந்த மோகன்லால், அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

கடந்த எட்டு மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத இருவரும் நேற்று கொச்சியில் நடந்த சினிமா தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர்.

இருவரும் சொல்லி வைத்த மாதிரி கறுப்பு உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

ஷுட்டிங் இல்லாததால் இரண்டு சூப்பர்ஸ்டார்களும் தாடி வளர்த்து வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டனர்.

இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகர் ரமேஷ் பிஷரோடி ‘மேன் இன் பிளாக்’ என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி