ஆண்களை ரசித்துப் பார்ப்பேன் …  : இளம்பெண்ணின்  தைரிய பதிவு

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan )  அவர்களின் முகநூல் பதிவு:

கேரளா உயர்போலீஸ் அதிகாரி ரிஷிராஜ் சிங் சொன்ன 14 விநாடிகள்..பார்வை..எப்ஐஆர் விவகாரம் தொடர்பாக ஆலப்புழா, மாவேலிக்கராவை சேர்ந்த வனஜா வாசுதேவ் என்ற இளம்பெண், தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

14051795_1166327670080636_4329572589215724104_n

‘’ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவரை உற்றுப்பார்ப்பது சகஜமான ஒன்றே.. நான்கூட அழகால் கவரப்பட்டு ஆண்களை பார்த்து ரசித்திருக்கேன்..’’ இவ்வளவுதான் வனஜா சொன்னார். உடனே ஆண்களிடம் கண்டனக்கணைகள் சீறின….

”நீயும் ஒரு பெண்ணா, கலாச்சாரத்தை சீரழிக்கிற நாயே, தேவடியா, உன் ரேட் என்ன? ”….இன்னும் எவ்வளவோ கேவலமாய் அம்புகள்..எதற்குமே அசராத வனஜா, பொறுமையாய் பதில் பதிவை போட்டிருக்கிறார். சுருக்கமாக இதோ,

”5 வயதில் தந்தையை இழந்த என்னையும் என் சகோதர னையும் தாய் வறுமையுடன் போராடி காப்பாற்றினார். நாங்கள் பசியோடு கழித்த நாட்கள் ஏராளம்… பகலில் என் தாய் என்னை அடிப்பதும், இரவில் தலையை கோதிவிட்டு கண்ணீர் சிந்துவதும் வாடிக்கை.

தனிமையின் கொடுமை தாயை வாட்டிவதைத்ததின் விளைவே அது என்று பின்னர் புரியவந்தது. பண்பான என் தாயாரின் நடத்தையை பற்றியும் கூச்சமே இல்லாமல் பல கதைகள் கட்டிவிட்டனர்.

அப்படிப்பட்ட சூழலிலே உழன்றுதான் பாலிடெக்னிக் முடித்து முதுநிலை பட்டப்படிப்புகாக பல இடங்களில் வேலைபார்த்துள்ளேன்..

கலாச்சாரத்தை நான் சீரழிப்பதாகக்கூறி என் அந்தரங்க உறுப்புகளை கொச்சைப்படுத்தும் நீங்கள், என்னை படுக்கைக்கு அழைக்கும்போதே கண்ணியம் பற்றியும் ஏன் பாடம் எடுக்ககூடாது.?

நான் ஆண்களை பார்ப்பதாலேயே அவர்கள் விருப்பப்ப ட்ட இடத்தில் ஒதுங்கி என் ஆடைகளை களைந்து தயாராகிவிடுவேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்..

வறுமையோடு போராடி குடும்பத்தை காப்பாற்றிய ஒரு விதவைத்தாயின் மகளான எனக்கு உங்கள் வசவுகள் எள்ளளவும் காயப்படுத்தாது. இந்த பதிவை பார்த்து என் பெண்மைக்கு நீங்களே ஒரு விலை நிர்ணயம் செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா? அப்படி இருந்தால் அதை வெளிப்படையாக கமெண்ட்டில் போடுங்கள். இன்பாக்சுக்குள் வந்து சொல்லாதீர்கள்…”

வனஜாவின் இந்த பதிவை, மாவட்ட ஆட்சியர், முன்னணி நடிகர்கள் போன்றோர் ஷேர் செய்ய, முகநூலில் அது வைரலாகிக்கொண்டிருக்கிறது..

 

கார்ட்டூன் கேலரி