1

 

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது வழக்கமான விசயமாகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடிப்பதும் வாடிக்கைதான்.

ஆனால் கண்ணாடி விழுவது மட்டும் நிற்கவே இல்லை. இன்று 63வது முறையாக கண்ணாடி நொறுங்கி விழுந்தது. நான்காவது நுழைவு வாயிலில் ஏற்பட்ட இந்த விபத்தால் யாருக்கும் எந்த காயமும் இல்லை. எப்போதும்போல இதுகுறித்து அதிகாரிகள்  தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது.