திருவனந்தபுரம்,

சிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு கேரள தனியார் கேரள தனியார் பள்ளி சங்கம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கேரள ஊடக நிறுவனமான மாத்ருபூமி  தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் போது, முதல்நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள கேரள தனியார் பள்ளி சங்கம் (All Kerala Self-Financing Schools Federation). பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு  அளிப்பதாக அறிவித்து உள்ளது. ஆகஸ்டு 1ந்தேதி முதல் இது அமல்படுத்தப்படுவதாக கூறியுள்ளது.

இந்தியாவில், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியது மும்பையை சேர்ந்த கல்சர் மெஷின் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பு நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

இதுபோல் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் வலியுறுத்தி உள்ளார்.