மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பார்கள்: குஜராத் சாமியார் சர்ச்சை பேச்சு

அகமதாபாத்: பெண்கள் மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் நாயாகத்தான் பிறப்பார்கள் என்று சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி  கூறியிருப்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்தவர் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி. அவரின் சொற்பொழிவுகள்  கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந் நிலையில், அவரின் சொற்பொழிவு விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: மாதவிடாய் காலத்தில்  பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாக பிறப்பார்கள்.

நான் சொல்வது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால்  அவர்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் பெண் நாய்களாக பிறப்பார்கள்.

இதை சொல்ல விருப்பமில்லாவிட்டாலும் எச்சரிப்பதற்காக கூறுகிறேன். ஆண்கள் சமைக்கக் கற்றுக்கொண்டால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு உதவும் என்றார்.