கங்கணா ரணாவத் நடித்து வெளியாகவுள்ள ‘மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளது.

பிரகாஷ் ராவ் கோவேலமுடி இயக்கத்தில் ஏக்தா கபூர் தயாரிப்பில் ராஜ்குமார் ராவ் மற்றும் கங்கணா இணைந்து நடித்திருக்கும் படம் ‘மெண்டல் ஹாய் க்யா’’.

ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது, ஆனால் தலைப்பு சற்றுக் கடுமையாக இருப்பதாக கருதியுள்ளது. இதனால் விரைவில் படத்தின் புதிய தலைப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

படத்தின் தலைப்பை மனநலப் பராமரிப்புச் சட்டம் 2017-ல் பல பிரிவுகளை மீறியிருப்பதாக இந்தியன் சைக்காட்ரிக் சொசைட்டியின் உறுப்பினர்கள் தணிக்கைத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.