மன உளைச்சல்? சென்னை ஐஐடி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை!

சென்னை:

பிரபலமான சென்னை ஐஐடியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர்,  தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை  கிண்டியில் உள்ள ஐஐடியில்  இயற்பியல் துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் அதிதி சிம்ஹா. பெங்களூரை சேர்ந்த இவர், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். சமீப காலமாக மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது அறையில் விஷம் அருந்தியுள்ளார்.

இதையறிந்ததும், அவரை உடடினயாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து  கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது தற்கொலைக்கு காரணமா என்ன என்பது குறித்து அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.