இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் கார் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

--

சென்னை

ந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் அடுத்த மாதம்  அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.   அத்தைகைய பொருட்கள் மூலம் வெளிநாட்டு இறக்குமதி குறைக்கப்பட்டு உள்நாட்டு பொருளாதாரம் முன்னேறும் என்னும் நோக்கில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.   அதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள்  இந்தியாவில் தங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

அவ்வகையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் தனது தொழிற்சாலையை சென்னையில் தொடங்கி உள்ளது.   இந்த தொழிற்சாலையில் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.  அமெரிக்க சாலை கட்டமைக்கு ஏற்றபடி இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜி எல் சி என்னும் ரக சொகுசு காரான இந்த மாடல் கடந்த 2016 ஆம் வருடம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.   இந்த கார் ஜெர்மனியில் இருந்து அப்போது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.   தற்போது இதே கார் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.