மெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை:

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.


நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மெரினா போராட்டக்காரர்கள் உடனே கலைந்து செல்வார்கள். அவசர சட்டத்தை முழுமையாக மாணவர்களுடன் படித்து பார்த்ததில் திருப்தி அடைந்துள்ளோம். அதனால் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இதில் எதுவும் பிதற்றும் பட்சத்தில் மீண்டும் போரட்டம் நடத்துவோம் என்றார்.
ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து நீதிபதி பரந்தாமனும் போராட்டக்காரர்கள் இடையே விளக்கினார். இந்த விளக்கத்தை ஏற்றும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல தொடங்கிவிட்டனர். அதோடு போக்குவரத்தும் படிப்படியாக சீராகி வருகிறது.