மெர்சல்.. ரூ. 1200 டிக்கெட் இங்கல்ல.. இலங்கையில்

விஜய் நடிச்சு தீவாளிக்கு வர இருக்கிற “மெர்சல்” படத்துக்கு  டிக்கெட் விலை 1200 ரூபான்னு  சமூகவலைதளங்கள்ல ஆளாளுக்கு எழுதினாங்களே.. அட.. நான்கூட இன்னிக்கு மதியானம் சொல்லல…?

அந்த டிக்கெட்டு இலங்கை தியேட்டர்லயாம்..  அங்க இருக்கிற மலிகவட்டா அப்படிங்கிற ஊர்ல ரூபி  அப்டிங்கிற தியேட்டர் காட்சிக்காம்.

ஸாரிப்பா… சமூக வலைதளங்கள்ல பார்த்து மெர்சலாயி, எழுதிட்டேன்.

அதே நேரம் ரஜினி நடிச்ச காபாலி படத்துக்கு இப்படி ஆயிரம், ரெண்டாயிரம்னு டிக்கெட்டு வித்துச்சு. சமீபத்துல அஜித் நடிச்ச விவேகம் படத்துக்கும் கூடுதல் விலையிலதான் டிக்கெட் வித்துச்சு.

அதனால நம்ப வேண்டியதா போச்சு.

ஆனா.. இன்னொரு விசயத்தைச் சொல்லியே ஆகணும்..

சில விஜய் ரசிகருங்க, : இலங்கையில் 1200 ரூபாங்கிறது, இந்திய மதிப்பில 505 ரூபாதான். அதனால 1200 ரூவான்னு  பார்த்தவுடனே பெருசா நினைச்சுட்டாங்க” அப்படின்னு வருத்தப்பட்டு, ஆவேசப்பட்டு சொல்லிக்கிட்டிருக்காங்க.

அடப்பாவிகளா.. அப்படியே பார்த்தாலும் 505 ரூபாங்கிறது ஏப்ப, சாப்ப காசாய்யா..? அதுவும் இந்தியாவ விட மோசமான நிதிநிலமை இருக்கிற நாட்டுல.. அதுவும் தமிழ் சனங்க இருக்க வீடு இல்லாம, செய்ய வேலை, தொழிலு இல்லாம அல்லாடுற நேரத்துல..?

என்னமோ போங்கப்பா..!