‘பிக் பாஸ்’ சீசன் 4 தொடங்க வாய்ப்புள்ளதா….?

கொரோனா ஊரடங்கிற்கு தளர்வுக்கு பின் சின்னத்திரை சீரியல்களுக்கு ஷூட்டிங் அனுமதிக்கப்பட்ட நிலையில், முக்கிய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்-4 நடக்குமா? இல்லையா? என்பதுதான் தற்போதைய பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.

‘‘சென்னையில் கரோனா பாதிப்பின் நிலை குறைந்தால் மட்டுமே பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொடர முடியும். இப்போதைய சூழலில் அதற்குச் சற்றும் வாய்ப்பில்லை. பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளின் தயாரிப்பு வேலைகளில் 300க்கும் மேலான நபர்கள் பணிபுரிய வேண்டும். குறைந்தது 2 மாதங்கள் முன்கூட்டிய திட்டமிடலும் வேண்டும்” என சேனல் தரப்பில் கூறப்பட்டுள்ளது .