இந்தாண்டில் மட்டும் ரூ.928 கோடி சம்பாதித்த கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

புதுடெல்லி: இந்தாண்டு அதிகம் சம்பாதித்த கால்பந்து வீரர்கள் தொடர்பான ‘போர்ப்ஸ்’ பட்டியலில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பத்திரிகை அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது. லயொனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்தாண்டு மட்டும் இவர் இதுவரை ரூ.928 கோடிகள் கிடைத்துள்ளது.

மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ(ரூ.861 கோடி), பிரேசில் வீரர் நெய்மர்(ரூ.706 கோடி) மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாப்பே(ரூ.309 கோடி), எகிப்து வீரர் முகமது சாலா(ரூ.272 கோடி) உள்ளனர்.