லிஸ்பன்: ஐரோப்பாவின் தங்க ஷு விருதை, தொடந்து மூன்றாவது ஆண்டாகப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி.

இவருக்கு அடுத்து நெருக்கமாகப் பின்தொடர்ந்து வந்த இவரின் போட்டியாளர் பிரான்ஸ் நாட்டின் கிளியான் பாப்பே 4 கோல்கள் பின்தங்கி, தங்க ஷு பெறும் வாய்ப்பை அறிந்தார்.

மெஸ்ஸி, தான் ஆடிய பார்சிலோனா அணிக்காக 36 கோல்கள் அடித்தார். ஆனால், பாப்பே தனது அணிக்காக அடித்த கோல்கள் 33 மட்டுமே.

தற்போது 31 வயதாகும் மெஸ்ஸி அடித்த கோல்களால், அவரின் அணி கடந்த மாதம் லா லிகா பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனால், தான் தங்க ஷு பெறுவதை பெரிய விஷயமாக கருதவில்லை எனவும், தனது அணியின் நலனே மனதில் முக்கியமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.