முதலாவது கோடை முன்அறிவிப்பை வானிலை மையம் செய்துள்ளது ஏன்?

MET SUMMER 2

இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டுமா? 

நம்முடைய இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதன் முதலாவது கோடை முன்அறிவிப்பில், 2015 ஆம் ஆண்டை விட 2016 ல் நாடு முழுவதும் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பநிலை சற்று அதிகமாக இருக்குமென கணித்துள்ளது. இந்த முன்னறிவிப்பு அமைப்பு பருவமழையை மட்டுமல்லாமல் கோடை மற்றும் குளிர் வெப்பநிலையையும் கணிக்க உதவும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் டி.எஸ்.பாய் ஒரு தனியார்( ப்ளூம்பெர்க்  டிவி இந்தியா) சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

MET 1

முதலாவது கோடை வெப்பநிலையை கணிக்கத் தூண்டியது என்ன?

இதுவரை, நாம் வடகிழக்கு பருவக்காற்று பற்றிய மழை முன்அறிவிப்பிற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இப்போது மழையுடன் சேர்ந்து வெப்பநிலையிலும் நமது கவனம் நகர்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், மழையுடன் வெப்பநிலையும் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம். இதுவரையில் 2015 தான் வெப்பமான வருடமாகவும் இந்திய வெப்பநிலை தான் உலகளவில் அதிகமாகவும் இருந்து சாதனை படைத்துள்ளது. ஆகையால் இத்தகைய கோடை முன்அறிவிப்பு தேவையாக இருந்தது. நாங்கள் வெறும் மழையை மட்டுமல்லாமல் வெப்பநிலையையும் கணிக்கும் பயனுள்ள திறன் கொண்ட ஒரு மாறும் முன்னறிவிப்பு அமைப்பை தான் கண்டுபிடித்துள்ளோம்.

இந்த ஆண்டு கோடைக்கான வானிலை ஆய்வு மையத்தின் முன்அறிவிப்பு  என்ன? இது ஒரு மிகுந்த வெப்பமான ஆண்டாக இருக்கப் போகிறதா?

ஆண்டு வெப்பநிலை 2015 ஆம் ஆண்டைப் போல இருக்கப் போகிறது ஆனால் கோடையைப் பொருத்தவரை, எல் நினோ சரியும் தாக்கத்தின் வேகத்தினால், வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை உயர்கிறது. எனவே, இந்த ஆண்டு ஒரு சூடான கோடை எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்க போகிறது?

பொதுவாக, கோடை காலத்தில் வட-மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். எனினும், அனைத்து துணைப் பகுதிகளிலும் சாதாரண வெப்பநிலை விட அதிகமான வெப்பம் இருக்கும் என வானிலை முன்அறிவிப்பு கூறுகிறது. எனினும், இந்த மூன்று மாத கோடையில், வட-மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் மைய வெப்ப அலைப் பகுதியில், சராசரி வெப்பநிலைக்கு மேலே 1 டிகிரி கூடுதலாக இருக்கும்.

இந்த கோடை காலம் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும்?

நாங்கள் கொடுத்துள்ள கோடை முன்அறிவிப்பு ஏப்ரல் முதல் ஜூன் வரை நீடிக்கும். பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகள் மையப் பகுதியில் அதிகமாக இருக்கும், மே மாதத்தில் அது வட-மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிகமாக இருக்கும், மற்றும் ஜூன் மாதத்தில் வெப்ப அலைகள் வட-மேற்கு இந்தியாவில் அதிகமாக இருக்கும். எனவே, பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை பருவமாக அறியப்படுகிறது. அதனால் எங்கள் முன்அறிவிப்பு இந்த மூன்று மாதங்களுக்காக.

MET SUMMER

பருவமழைக்கான ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கின்றன?

எல்நினோ குறைந்து வருவதினால் இப்போது வரை, பருவமழைக்கான அறிகுறிகள் மிகவும் மோசமாக இல்லை. எனினும், லா நினா விளைவின் தாக்கம் உணரப்பட்டாலும், அது பருவமழை காலம் முடிந்த பிறகு தான் நடைபெறும் என்று எங்களது வானிலை அமைப்பின் முன்அறிவிப்பு காட்டுகிறது. எனவே பருவமழையின் போது , எல் நினோவின் தக்கம் நடுநிலையாக இருக்க வாய்ப்பு அதிகம்.

இருந்தாலும், எல் நினோ மட்டும் தான் பருவமழை பாதிக்கிறது என்று அர்த்தமல்ல, மற்ற காரணிகளான இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை, நில வெப்பம், பனிமூட்டம் மற்றும் பல இதர காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே பொதுவாக ஏப்ரல் மத்தியில் அனைத்தும் தெளிவாகின்றது, அப்போது தான் நாங்கள் பருவமழைக்கான முதல் முன்அறிவிப்பை கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

குளிர்காலத்திற்கான வெப்பநிலை முன்அறிவிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கலாமா?

ஆம், இந்த ஆண்டு முன்அறிவிப்பு கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

கார்ட்டூன் கேலரி