ராஜஸ்தானில் விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்

ஞ்சோர், ராஜஸ்தான்

விண்கல் போன்ற பொருள் இன்று காலை ராஜஸ்தானில் விழுந்துள்ளது.

இரவு நேரத்தில் வெகு தூரத்தில் நட்சத்திரம் போன்ற பொருள் ஒன்று பூமியில் விழுவது போல் தோற்றத்தை நாம் கண்டிருக்கலாம்.

அவற்றை விஞ்ஞானிகள் விண்கல் என அழைக்கின்றனர்.

பல விண்கற்கள் பூமியை அடையும் முன்பே எரிந்து சாம்பலாகி விடுவது உண்டு.

அதே நேரத்தில் ஒரு சில விண்கற்கள் விழுந்ததால் பூமியில் பாதிப்பு ஏற்பட்டதும் உண்டு.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சஞ்சோர் என்னும் ஊர் உள்ளது.

இன்று காலை சுமார் 7 மணிக்கு இங்கு விண்கல் போல ஒரு பொருள் வி ழுந்துள்ளது

இந்த பொருள் சுமார் 2.78 கிலோ எடையுடன் இருந்துள்ளது.

புவியியல் நிபுணர்கள் இது ஒரு உலோக விண்கல் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தகைய விண்கற்கள் அரிதானவை மற்றும் அதிக மதிப்புடையவை எனவும் கூறி உள்ளனர்