நாளை சிவராத்திரி விரத முறைகள் தெரியுமா?

நாளை சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.    மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று இரவில் சிவராத்திரி கொண்டாடப் படுகிறது.

உலகத்தில்; பிரளயம் ஏற்பட்ட போது அனைத்து உயிர்களும் சிவனிடம் ஒடுங்கின.  உலகங்கள் அனைத்தும் சிவனுள் அடங்கியதால் உயிர்கள் தோன்றவில்லை.   அதனால் அம்பிகை சிவனை நோக்கி தியானம் செய்தாள்.   தியானத்தால் மனம் மகிழ்ந்த சிவன் தன்னுள் ஒடுங்கிய அனத்திய் உயிர்களையும் மீண்டும் படைத்து அருளினார்.

அம்பிகை  தான் வேண்டிய இந்த நேரம் சிவராத்திரி என வழங்க வேண்டும் எனவும் இந்த நாளில் விரதம் இருப்போர்களுக்கு நல்ல பலன் அளிக்க வேண்டும் எனவும் சிவனிடம் வேண்டினாள்.  சிவனும் வரம் அளித்தார்.  இந்த ஒரு நாள் முழுவதும் ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டபடி சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவாய நம என துதிப்போர்க்கு ஒரு நாளில் ஒருவருடம் பூஜை செய்த பலன் கிட்டும்.

இந்த விரதத்தை முதல் நாளில் இருந்து ஆரம்பிப்பது சிறந்ததாகும்.    சிவராத்திரி விடியற்காளையில் எழுந்து குளித்து முழு தினமும் உணவருந்தாமல் சிவனை நினைத்து இருக்க வேண்டும்.   முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு மீத நேரங்களில் பால் பழம் அருந்தலாம்.   ஓம் சிவாய நம ஓம் நமசிவாய என 1008 முறை ஜெபிக்க வேண்டும்.   இரவு முழுவதும் சிவாலயத்தில் அமர்ந்து கண் விழுத்து நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும்.

கார்ட்டூன் கேலரி