சென்னை

மது ஆதார் எண் எங்கு பயன்படுத்த பட்டுள்ளது என்பதை கண்டறிவது குறித்த செய்தி இதோ.

 

ஆதார் எண் அனைத்து அரசு பணிகளுக்கும் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த போதிலும் அரசு அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆதார் எண்ணில் நமது முக்கிய விவரங்கள் பல உள்ளதால் அதைக் கொண்டு பலரும் பல பயன்பாட்டுக்கு நமக்கே தெரியாமல் பயன்படுத்த முடியும்.

இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் ஆதார் எண்ணை பலரும் தவறாக பயன்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட தகவல் பலரை அதிர வைத்தது. வன்க்கி அதிகாரிகள் அதிகாரமற்ற நிலையில் பல இடங்களில் ஆதார் எண்ணைக் கொண்டு பல இடங்களில் ஆதார் விவரங்களை திருடி உள்ளதாக தெரிவித்துள்ளனர். நமது ஆதார் எண் வேறெங்கும் பயன்படுத்த பட்டிருக்கலாம் என மக்கள் அஞ்சினர்.

அதைக் கண்டறிய வேண்டிய வழிமுறைகள் இதோ :

1. ஆதார் இணைய தளத்தினுள் சென்று ஆதார் அடையாள சரித்திர (HISTORY) பகுதிக்கு செல்லவும்.

2. அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை பதிந்து அதில் உள்ள பாதுகாப்பு எண்ணையும் பதியவும்

3. அதன் பிறகு ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) அமைக்க தேர்வு செய்யவும்.

4. உங்கள் மொபைலுக்கு ஓடிபி வந்ததும் அதை அந்த இணைய தளத்தில் பதியவும்.

5. தற்போது உங்களால் எந்த கால கட்டத்தில் அல்லது எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தேர்வு செய்ய முடியும். அதை தேர்வு செய்த பிறகு சப்மிட் என்பதை அழுத்த வேண்டும்.

6. கணினி திரையில் உங்களுடைய ஆதார் எந்த தேதியில் என்ன காரணத்துக்காக எங்கு பயன்படுத்தப் பட்டது என்னும் விவரங்கள் தெரிய வரும். ஆனால் இந்த விவரங்கள் மூலம் யார் அதை பயன்படுத்தியது என்பதை கண்டறிய முடியாது.