டில்லி

ன்லைன் மூலம் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைப்பது குறித்த விளக்கம் இதோ

வருமான வரிக் கணக்கு எண்ணான பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டும் மக்களில் பலருக்கு இது குறித்த செய்முறை தெரியாமல் இருந்து வந்துள்ளது.

தற்போது இந்தக் காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   ஆன்னைன் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை இங்கு காண்போம்.

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

7. தற்போது இணைப்பு முடிந்தது எனச் செய்தி வரும்.