பூத் ஸ்லிப் தேவை என்றால் நீங்களே தயாரிக்கலாம்

சென்னை

பூத் ஸ்லிப் தேவை எனில் அதை நீங்களே தயாரிக்க முடியும்

மக்களவை தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப் தேவை இல்லை என தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. ஆயினும் ஒரு சில வாக்குச் சாவடிகளில் பூத் ஸ்லிப் எடுத்து வரச் சொல்லி திருப்பி அனுப்பப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பூத் ஸ்லிப் தேவை இல்லை எனினும் அதை நீங்களே தயாரிக்க முடியும்.

உங்களுடைய பெயரை வைத்து  https://t.co/sIrOolASkd என்னும் வலை தளத்தில்  உங்களுடைய வரிசை எண், வாக்குச்சாவடி எண் உள்ளிட்டவைகளை கண்டறியவும்.

ஒரு தாளில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவைகளை எழுதிக் கொள்ளவும்.

உங்களுடைய பூத் ஸ்லிப் தயாராகி விட்டது.