#MeToo விவகாரம்: சுபவீ மீது கவிஞர் தாமரை பாய்ச்சல்

சென்னை:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மீ டூ விவகாரத்தில், வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கிய பிரபல எழுத்தாளர் சுப.வீரபாண்டியன் மீது கவிஞர் தாமரை கடுமையாக சாடியுள்ளார்.

இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ???? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் #MeToo விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துமீது பாடகி சின்மயி புகார்கூறி பிள்ளை யார் சுழி போட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும், திமுக முன்னணி பிரமுகருமான சுப.வீரபாண்டியன்,  வைரமுத்துக்கு ஆதரவாக டிவிட் போட்டிருந்தார். அதில்,

‘இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’ என்று பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தநிலையில், அதை சுபவீ நீக்கி விட்டார்.

இதுகுறித்து பாடலாசிரியர் தாமரை தனது ஃபேஸ்புக்கில், சுபவீயின்  இந்த பதிவால் அவரது உண்மை முகம் வெளியே வந்ததாக கூறி உள்ளார்.

இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ???? என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சுபவீயும் தியாகுவும் தமிழ் தமிழர் இயக்கத்தில் பொதுச்செயலாளர், தலைவர் என ஒன்றாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள்.  தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக் கெல்லாம் அன்னார் சுப.வீதான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இவர்கள் இரண்டு பேருக்கும்…

இயக்கத்தின் பேரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும் சாட்சி’ என்று குமுறி இருக்கிறார்.

சுபவீ-ன் டிவிட்டுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.