பொய்யான பாலியல் குற்றச்சாட்டுக்கள்: கணவருக்காக வரிந்துகட்டும் எம்.ஜே.அக்பர் மனைவி

--

டில்லி:

ன் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று, சமீபத்தில் தனது மத்திய இணை அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்து எம்.ஜே.அக்பரின் மனைவி காட்டமாக கூறி உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாலியல் தொடர்பான மீ டூ விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரும் சிக்கினார். அவர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது, பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக இந்திய பெண் பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர்கள்  குற்றம் சாட்டியிருந்தனர். வெளிநாட்டை சேர்ந்த பல்லவி கோகோய் வாஷிங்டன் போஸ்டில் எம்.ஜே.அக்பர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

100க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சர் எம். ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனத்தை எழுப்பினர். இதனையடுத்து அவர் தனது அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்தநிலையில், தனது கணவர் மீதான  பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்றும்,   எம்.ஜே.அக்பரின் மனைவி  மல்லிகா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்துக்கு  வெளிநாட்டு செய்தியாளர்  பல்லவியால் மகிழ்ச்சியற்ற சூழல் நிலவி வந்துள்ளது.   எனது கணவருக்கும் பல்லவிக்கும் இடையேயான உறவு எனக்கும் தெரிந்த ஒன்று தான் என்று தெரிவித்து உள்ளார்.

எங்களது இல்லத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் இளம் பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது  பல்லவியும், தனது கணவர் அக்பரும் ம் இணைந்து  நடனமாடியது எனக்கு மிகவும் வலியை ஏற்படுத்தியது. எனது கணவரிடம் இதுதொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டேன். அவர் குடும்பம் தான் முக்கிய என முடிவெடுத்தார்.

துஷிதா பட்டேல், பல்லவி கோகோய்  ஆகியோர் எங்களது விட்டிற்கு வருகை தந்து மது அருந்திவிட்டு சந்தோஷமாக பொழுதை கழிப்பது வழக்கம். ஆனால் அவர் ஏன் இப்போது இத்தகைய பொய்யான பாலியல் குற்றச்சாட்டை தன் கணவர் மீது சுமத்துகிறார்.. இது ஏன்   என்பது தெரியவில்லை.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.