தமிழகத்தில் மெட்ரோ ரத்த வங்கி! அமைச்சர் தகவல்

சென்னை,

மிழகத்தில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக ரத்ததான தினத்தையொட்டி  சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி தமிழகத்தில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும், மெட்ரோ ரத்த வங்கியால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களும் பயனடையும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறினார்.

இந்த ரத்ததான முகாமில் ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.