திருவனந்தபுரம்

டைபெற உல்ள கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டில்லியில் முதல் முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி புகழ் பெற்றவர் ஸ்ரீதரன்.  அத்துடன் கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட நகரங்களின் மெட்ரோ ரயில் திட்ட நிர்வாகியாகவும் இவர் பணி புரிந்துள்ளார்.   ஆகவே அவர் ’மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என அழைக்கப்பாட்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்தார்.

கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுவதால் அங்கு  பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர்.  இதையொட்டி நடந்த விஜய் யாத்திராவில் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் ஸ்ரீதரன் பாஜாக்வில் இணைந்தார்.  அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், “ மக்களால் அன்போடு மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரனை பாஜகவின் கேரள முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளோம்.  அவர் மிதான நம்பிக்கை மற்றும் அவரது திறமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.  பிரதமர் மோடியின் அரசு மற்றும் வளர்ச்சி அரசியலில் நம்பிக்கை உள்ள மக்கள் அவரை முதல்வர் ஆக்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.