மேலும் 15 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை: மத்திய அமைச்சர் தகவல்

--

டில்லி:

நாட்டின் சில பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில்,  மேலும் 15 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில், தலைநகர் டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சேவை மேலும் 15 நகரங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 515 கி.மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருவதாகவும், 15 நகரங்களில் விரைவில் 660 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

நாக்பூர், அகமதாபாத் உள்பட மேலும் 15 நகரங்களுக்கு, மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்தும் வகையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு இறுதியில்,  நாக்பூர், அகமதாபாத், நொய்டா ஆகிய நகரங்களில், அடுத்தாண்டு இறுதியில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவு அடையும்.

இவ்வாறு அமைச்சர் கூறி உள்ளார்.

You may have missed