டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை: பொங்கலுக்கு தொடக்கம்

--

சென்னை:

சென்னையில் நடைபெற்று வரும்  மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் பெரும்பாலான இடங்க ளில் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்  வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, அண்ணாசாலை டிஎம்எஸ் முதல்  வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சென்ட்ரல் முதல் ஆதம்பாக்கம் வரை சுமார் 35 கி.மீட்டர் தொலைவு இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், திருமங்கலம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், விமான நிலையம் வரை இயக்கப்பட்டு வரும் ரயில்களில் தற்போது பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், மற்றொரு கட்டமாக நடைபெற்று வரும்  அண்ணா சாலை – டிஎம்எஸ், சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டை வரை சுமார் 9.5 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் இயக்குவதற் கான அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தற்போது  மின்இணைப்புப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால், வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பம்  2-வது வாரத்தில் இந்தத் தடத்தில் சோதனை முறையில்  மெட்ரோ ரயில்களை இயக்க இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து  ரயில்வே பாது காப்பு ஆணையரின் ஒப்புதல் பெற்று, பொங்கல் பண்டிகைக்கு இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங் கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.