சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, நாளை முதல் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படு வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்க காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, ஊரடங்கில் தளர்வகள் அளிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப் பட்டது.

அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து தமிழகத்தில் தொடங்கியது.   சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டகமாக, சென்னை விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை இடையேயான முதல் வழித்தடத்தில் மட்டும் போக்குவரத்து தொடங்கியது.

பின்னர் இன்றுமுதல் (9ந்தேதி)  இரண்டாம் கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பரங்கிமலை – புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் இடையேயான இரண்டாவது வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை  காலை 7 முதல் இரவு 8 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தற்போது சேவையின் நேரத்தை மேலும் ஒரு மணி நீட்டித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  காலை 7 மணி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், ஏற்கனவே இரவு 9 மணி வரை சேவை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தும் நேரமும் 20 வினாடிகளில் இருந்து 50 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.