மிலாடி நபியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிப்பு!

சென்னை: மிலாடி நபியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக  நாளை (அக்டோபர் 29) மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமை அன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி  காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக நாளை மட்டும் ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.