தமிழக அரசின் பொதுமுடக்கம் அறிவிப்பை மீறி ஞாயிறன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…!

சென்னை: ஏப்ரல் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 25ல் மெட்ரோ ரயில்கள் 1 முதல் 2 மணிநேர இடைவெளியில் இயக்கப்படும் என்றும் சென்ட்ரல்-கோயம்பேடு-விமான நிலைய வழித் தடத்தில் 2 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் 2 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் விம்கோ நகர்-விமான நிலையம் வழித்தடத்தில் 1 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் காரணமாக மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகளும், இரவு ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது.