சேலம்:

ர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால்  அணையின் நீர்மட்டம் இன்று 71 அடியை தாண்டியது. இந்த நிலையில்,  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும்; நாளை மாலைக்குள் 2.40 லட்சம் கன அடியை எட்டும்  மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரில் அளவு அதிகரித்து வருகிறது.  அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரப்பி உள்ளதால், உபரி நீர் அனைத்தும் காவிரியில் திறந்துவிடப்பட்டுஉள்ளது.

தற்போது காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியில் இருந்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.15 அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில்  இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீரில் அளவு இன்று இரவு மேலும்  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மத்திய ஜல்சக்தித்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில்,  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என்றும்,  இது  நாளை மாலைக்குள் 2.40 லட்சம் கன அடியை எட்டும் என்று  அறிவித்து உள்ளது.

இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.