நடப்பாண்டில் 2வது முறையாக 100அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்…

மேட்டூர்: நடப்பாண்டில் மேட்டூர் அணை 2வதுமுறையாக 100அடியை தாண்டி உள்ளது. 120அடி கொள்ளவு கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,542 கனஅடியாக இருந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு , அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக இருந்த நிலையில், 100அடியைஎட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீர் வரத்து குறையத்தொடங்கியதால், அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

இந்த நிலையில், நேற்று மேட்டூர் அணை மீண்டும்த 100 அடியை எட்டியது. அதாவத 100.700 அடியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது அங்க நீர் வரத்து 14,210 அயாக உள்ளது.  அதே வேளையில்  அணையில் இருந்து 9,800 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நடப்பாண்டில், கடந்த செப்டம்பர் மாதம் 26ந்தேதி 100அடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.