முழு கொள்ளவை நெருங்குகிறது மேட்டூர் அணை! 117அடியை தாண்டியது

மேட்டூர்:

காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது. இதன் காரணமாக விரைவில் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால், இடையில் குறைக்கப்பட்ட தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 120 அடி உயரம் கொண்ட  மேட்டூர் அணையின் நீர்மட்டம்  நேற்று மாலை நிலவரப்படி 116.930 ஆக இருந்தது. இன்று காலை 117 அடியை தாண்டியுள்ளது.

மேலும் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும், அணை யில் இருந்து பாசனத் தேவைக்கு 10500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இதன் காரணமாக மேட்டூர் அணை  விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed