மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பை வந்தடைந்தது: மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு

திருச்சி:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக  நேற்று முன்தினம் திறக்கப்பட்ட  காவிரி நீர் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு வந்தடைந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி விவசாயிகள், தண்ணீரின் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக, காவிரில் அதிகஅளவிலான தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையும் 114 அடியை எட்டி உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார். தற்போது வினாடிக்கு 2000கன அடிநீர் விவசாயத்துக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் இன்று திருச்சி அருகே உள்ள முக்கொம்பு அணைக்கு வந்து சேர்ந்தது.   இதனையடுத்து திருச்சி முக்கொம்பில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன்  மலர் தூவி வரவேற்றனர்.

கார்ட்டூன் கேலரி