109 அடியை எட்டியது மேட்டூர் அணை: தண்ணீரை தடாலடியாக குறைத்தது கர்நாடகா

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால், காவிரியில் வினாடிக்கு 1லட்சத்து 15ஆயிரம் கன நீர் வரை திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டமும் விறுவிறுவென உயர்ந்து 109 அடியை எட்டி உள்ளது.

இந்த நிலையில்,கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரை தடாலடியாக குறைத்து உள்ளது கர்நாடக அரசு. நாளை கர்நாடக அணைகளை முதல்வர் குமாரசாமி பார்வையிட்டு, பூஜை செய்ய இருப்பதால், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று வரை  1.15 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், ஒரே நாளில் 45 ஆயிரம்  கன அடியாக குறைத்துள்ளது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 109 அடியை எட்டி உள்ளது. தற்போது அணையின் நீர்இருப்பு 76.99 டிஎம்சி.,யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று முதல்வர் எடப்பாடியால்  திறக்கப்பட உள்ளது.

கார்ட்டூன் கேலரி