120 அடி: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்ரூர்:

ர்நாடகாவில் இருந்து தொடர்ந்து வரும் காவிரி நீர் காரணமாக மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அணை தற்போது நிரம்பி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில்  பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகா வில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில்,  காவிரியில் அதிக அளவிலான நீர்  தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

தற்போது பாசனத்துக்காக வினாடிக்கு 20ஆயிரம் கன நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை நிரம்பி உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் அணைத்தும் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி