கர்நாடகா நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி நீர் வருகை

மேட்டூர்:

ர்நாடகவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 25 ஆயிரம்  கன அடியாக அதிகரித்து உள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அதிகாரப்பூர்வமாக  உத்தரவிட்டதால்,  ஏற்கனவே தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியில் இருந்து 38 ஆயிரம்  கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு இதுவரை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது 65.15 அடி, அணையின் நீர் இருப்பு- 20.67 டி.எம்.சி ஆக உள்ளது அடி, அணையின் நீர் இருப்பு – 23.38 டிஎம்சி ஆக உள்ளது.

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.